உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மாமா வீட்டிற்கு சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது லிப்ட் தருகிறோம் என கூறி 5 முதல் 6 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இளம்பெண்ணை தெருவில் துரத்தி சென்றனர்.

அவர்களுக்கு பயந்து இளம்பெண் தெருவில் ஓடியுள்ளார். இருப்பினும் மர்ம நபர்கள் இளம்பெண்ணை மடக்கி பிடித்து அருகில் இருக்கும் வயலுக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த காட்சிகள் பலராம்பூர் மாவட்ட எஸ்பிஐ வீட்டில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி கூறும் போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அங்கூர் வர்மா, ஹர்ஷித் பாண்டே ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளோம். தெருவில் இளம்பெண் ஒருவரை பைக்கில் துரத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.