மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனையகத்தில் தொடங்கிய பழக்கம் காதலாக மாறி, இறுதியில் ஒரு பெண்ணின் வாழ்க்கையே சீரழிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷோரூமில் வேலை பார்த்து வந்த 24 வயது திருமணமான பெண்ணிற்கு, அங்கு சக ஊழியராகப் பணியாற்றிய ஷாஹித் கய்யூம் சையத் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது; இதனால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், தான் 2 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே அவரை பிரிந்து வந்து கடந்த 2025 டிசம்பரில் விவாகரத்தும் செய்துள்ளார்.

அந்த இக்கட்டான நேரத்தில், “உன் குழந்தையை நான் பார்த்துக்கிறேன், என் பெயரை வைக்கிறேன், உன்னைக் கல்யாணமும் பண்ணிக்கிறேன்” என ஆசை வார்த்தை கூறி ஷாஹித் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து உடலுறவு கொண்டு வந்த நிலையில், அந்தப் பெண்ணிற்குப் பெண் குழந்தை பிறந்து ஒன்றரை மாதமே ஆன சூழலிலும் திருமணம் செய்வதாகக் கூறி மீண்டும் மீண்டும் தவறாக நடந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஷாஹித் வருவதை நிறுத்திவிட்டு போனை எடுக்காமல் தலைமறைவானதால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட பெண் விசாரித்தபோது, காதலன் ஷாஹித்துக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர்  தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.