நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் இன்று(ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது என்றே சொல்லாம். ஏனெனில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

நிலையில் ஜெயிலர் படம் வெளியாகும் இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதியன்று) பணியாளர்களுக்கு மதுரையைச் சேர்ந்த Uno Aqua Care நிறுவனம் விடுமுறை அளித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தங்களது ஊழியர்களுக்கு இலவச ஜெயிலர் பட டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும், எங்கள் தாத்தா, அப்பா, எங்கள் தலைமுறை, தங்களது மகன் மற்றும் பேரன் எல்லோருக்கும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.