உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பாம்பு கடித்த நபர் ஒருவர் அந்தப் பாம்பையே தனது ஜாக்கெட்டிற்குள் சுருட்டி எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை கடித்தது எந்த வகையான பாம்பு என்பதை மருத்துவர்களுக்குத் துல்லியமாகக் காட்டினால் மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்ததும், ஜாக்கெட்டிற்குள் இருந்து உயிருள்ள பாம்பை வெளியே எடுத்ததைக் கண்டு அங்கிருந்த மருத்துவர்களும் நோயாளிகளும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பாம்புடன் வந்த அந்த நபரைக் கண்டு திகைத்த மருத்துவர்கள், மேலும் அவருக்குச் சிகிச்சை அளிக்க ஒரு முக்கிய நிபந்தனையை விதித்தனர்.
मथुरा में एक ई-रिक्शा वाले को सांप ने काट लिया।
सांप ऐसा वैसा नहीं- एकदम फ़नधारी
आदमी जिला अस्पताल में खड़े होकर चिल्ला रहा था कि उसका इलाज नहीं हो रहा।
तभी एक ने कहा – कहां है सांप? तो उसने जैकेट के अंदर से जिंदा सांप निकाल कर दिखा दिया।
ग़ज़ब धुरंधर लोग हैं 😂 pic.twitter.com/k4nSnrIRin
— Govind Pratap Singh | GPS (@govindprataps12) January 13, 2026
“>
இதனால் முதலில் அந்தப் பாம்பை ஒரு பையிலோ அல்லது பாட்டிலிலோ அடைத்துப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு வெளியே வைத்தால் மட்டுமே சிகிச்சையைத் தொடர முடியும் என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர். இதனையடுத்து, பாம்பு பாதுகாப்பாக அகற்றப்பட்ட பின்னரே அவருக்குத் தேவையான முதலுதவி மற்றும் விஷமுறிவு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
