தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தில் கேவிஎன் ஸ்டுடியோ தயாரிப்பில் நடித்தார்.
இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் எச்.வினோத் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதாபைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக இருந்தது.
ஆனால் சென்சார் சான்றிதழ் காரணமாக படம் இன்னும் வெளியாகத நிலையில் சமீபத்தில் முழு படமும் எச்டி தரத்தில் இணையத்தில் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய் தன்னை அரசியலில் இருந்து முடக்கவே இப்படி செய்வதாக சமீபத்தில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இது தொடர்பாக தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அவரிடம் ஜனநாயகன் ரிலீஸ் ஆனதால் நடிகர் விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தயாரிப்பாளரிடம் கண்டிப்பாக படத்தை வெளியிட விடாமல் பிரச்சனை செய்வார்கள் என்னை வைத்து நீங்கள் படம் எடுத்து ரிஸ்கை சந்திக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் எல்லாவற்றிற்கும் சம்மதித்து தான் இந்த படத்தை தயாரித்தது.
இந்த படம் இணையத்தில் கசிந்ததை நினைத்து நாங்கள் யாருமே அதிர்ச்சி அடையவில்லை. இது எல்லாமே முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். மேலும் படம் தியேட்டரில் நல்லபடியாக பிரச்சனை இல்லாமல் வெளியாகியிருந்தால் மட்டும் தான் உண்மையிலேயே நாங்கள் அதிர்ச்சி அடைந்திருப்போம் என்றார்.
Q: Due to #JanaNayagan leak, Vijay gonna do another film❓#SAC: @actorvijay clearly mentioned the producer, that many issues will come while signing itself. We are not shocked with the JanaNayagan leak. I suspect leak happened because of oppostion party pic.twitter.com/hW9TVfAcSA
— AmuthaBharathi (@CinemaWithAB) April 20, 2026
“>
