தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசியலுக்கு வர இருக்கிறார். அவர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக தானும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும்போது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

தமிழகம் முழுவதும் 233 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள விஜய் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளருக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் விஜய் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுவரும் நிலையில் ஒரே ஒருமுறை மட்டும் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் விஜய் பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜயிடம் குடும்பம் வேணுமா? தமிழ்நாடு மக்கள் வேண்டுமா என்று தான் கேட்டதாகவும் அதற்கு எனக்கு குடும்பத்தை விட என்னுடைய தமிழ்நாட்டு மக்கள்தான் வேண்டும் என்று அவர் கூறியதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக நானும் என் மனைவியும் விஜயும் தமிழ்நாட்டு மக்களுக்கு தத்து கொடுத்துவிட்டோம் என்று கூறினார். மேலும் இந்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“>