தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 21) தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மிகத் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்களுடன் நெருக்கமாகக் கலந்துரையாடிய அவர், சாலையோரக் கரும்புச் சாறு கடை ஒன்றில் அவரே கரும்புச் சாறு போட்டுக் கொடுத்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர், அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி பயணம் செய்தபடி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குச் சேகரித்தார்.

“கொளத்தூர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்குத் தான் வெற்றி” எனப் புன்னகையுடன் தெரிவித்த ஸ்டாலினின் இந்த எளிய அணுகுமுறை, தேர்தல் களத்தில் பெரும் வைரலாகி வருவதோடு, திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை மும்மடங்கு ஆக்கியுள்ளது.

“>