தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. தவெக தலைவர் விஜய் மீதான சிபிஐ விசாரணை மற்றும் அவரது படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பாஜகதான் காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் பதிலடி கொடுத்தார். தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் கட்சி இதுபற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று விமர்சித்தார்.
மேலும், செல்வப்பெருந்தகை தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே முக்கியத்துவம் குறைந்துவிட்டதால், எதையாவது பேசி அரசியலில் குளிர்காய நினைக்கிறார் என்றும் தமிழிசை சாடினார்.
சிபிஐ விசாரணை குறித்து விஜய்யோ அல்லது அவரது ரசிகர்களோ கூட புகார் கூறாத நிலையில், செல்வப்பெருந்தகை ஏன் இடையில் புகுந்து பேசுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
அரசு மருத்துவமனைகளில் நடக்கும் வன்முறைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
