அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி கிரேஸ் மரியானி என்பவருடன் அவரின் வளர்ப்பு நாயான ஜஸ்டின் தொடர்ந்து வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அந்த மாணவியுடன் சேர்த்து அவரின் வளர்ப்பு நாய்க்கும் டிப்ளமோ பட்டம் வழங்கி செட்டான் ஹால் பல்கலைக்கழகம் சிறப்பித்துள்ளது.

ஜஸ்டின் டிப்ளமோ பட்டத்தை தனது வாயால் அழகாக கவி பெற்றுக்கொண்ட போது அரங்கமே அதிர்ந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்ட மாணவி கல்வியில் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். வளர்ப்பு நாய்க்கு வழங்கப்பட்ட பட்டமளிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.