யுரேனஸ் சூரியனிலிருந்து 2.9 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முதன்முறையாக யுரேனஸின் வடதுருவத்தில் பொங்கி இயலும் சூறாவளிகள் செயல்படுவதை குறிக்கும் வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகள் யுரேனஸ் கிரகத்தில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்த துருவ சூறாவளியை கண்டுபிடித்துள்ளனர். 2015, 2021, 2022ஆகிய ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவு மூலம் கிரகங்களின் வளிமண்டலத்தை பற்றி ஆழமாக ஆராய விஞ்ஞானிகளுக்கு இது உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் நமது சூரிய குடும்பத்தில் வளிமண்டலங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.