கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே சாதித்து வருகின்றனர். இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நடக்கிறது. அந்தவகையில் அமெரிக்காவில் 12 வயது சிறுவன் ஒருவன் கல்லூரியில் ஐந்து டிகிரி பெற்று சாதனை படைத்துள்ளார். க்ளோவிஸ் ஹங் என்ற அச்சிறுவன் அமெரிக்காவின் புல்லர்டன் கல்லூரியில், மிகவும் இளம் வயதில் பட்டதாரியாகி சாதனை படைத்துள்ளார்.

க்ளோவிஸ் ஹங், ஐந்து அசோசியேட் பட்டங்களை பெற்றுள்ளார். இதுபோதாது என்று ஆறாவது பட்டத்தை அடுத்த ஆண்டு பெற அவர் திட்டமிட்டுள்ளார். வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய வளர்ச்சி, கலை மற்றும் மனித வெளிப்பாடு, மற்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய ஐந்து துறைகளில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.