டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது பெற்றுள்ளார். கடந்த வருடம் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பெரும் சரிவின் காரணமாக எலான் மஸ்க்கின் பங்குகள் சரிவடைந்தது. இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை அர்னால்டு பெற்றார். அர்னால்டு லூயிஸ் விட்டன், பெண்டி, ஜென்சி போன்ற பிராண்டுகளை நிறுவியவர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து LVMH பங்குகள் தொடர்ந்து சரிவடைந்து வந்ததால் அர்னால்டின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 மில்லியன் டாலர் வரை சரிந்தது. அதே நேரம் மஸ்க் நடப்பாண்டில் 55.3 பில்லியன் டாலர் சொத்துக்களை ஈட்டியுள்ளார். இதன் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். இந்த வருடம் மஸ்கின் சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதனால் எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மேலும் இந்த வருடம் அர்னால்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்களாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும் ‌