மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில் வேகமாகப்பட்டது.

இதில் சிறுவன் சுருண்டு கீழே விழுந்தான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.