சீனாவின் ஒரு வீட்டு வீடியோ காட்சி தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், வீட்டின் லிவிங் ரூமில் சுவரிலிருந்து சாளரம் போன்ற டைல்கள் ஒரு கணத்தில் இடிந்து விழும் அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு சில விநாடிகளுக்கு முன், அந்த வீட்டில் இருந்த பூனைகள் மர்மமாக ஆபத்தை உணர்ந்து பெண்ணை தப்பவைக்க காரணமாக இருந்தனர்.
ஜூலை 12ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் வீட்டு CCTV காட்சியில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு சீனப் பெண், தளர்வான உடையில் அமர்ந்து செல்பேசியில் மூழ்கி இருக்கிறார். லிவிங் ரூமின் மூன்று மூலைகளிலும் பூனைகள் அமைதியாக உட்கார்ந்துள்ளன. சில நொடிகளில், டிவி யூனிட்டின் அருகே இருந்த ஒரு பூனை மேசையின் மேல் ஏறி சந்தேகத்துடன் சுற்றிப் பார்க்கிறது. மற்ற இரு பூனைகளும் பதற்றமாக நடந்து கடுமையான ஏதோ ஒன்று வரப்போகிறதென உணர்கின்றன.
அப்பொழுது, சிறிய சத்தங்கள் கேட்டதும் பூனைகளின் நடத்தை வித்தியாசமாக மாறியது. இதைப் பார்த்த பெண், ஃபோனை விட்டு எழுந்தபோது, டிவி யூனிட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து, டைல்கள் விழுகின்றன. சில நொடிகளில் அந்த பெண்ணும், பூனைகளும் அதிரடியாக தப்பியோடியதால் உயிர் பாதுகாப்பது போல பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ‘Cats really can save your lives’ எனும் தலைப்பில் வைரலாக பரவியது. நெட்டிசன்கள், “பூனைகளுக்கு மனிதர்களைவிட நுண்ணிய சத்தங்களை கேட்கும் திறன் இருக்கிறது. சுவர் முறிந்த சத்தங்களை பூனைகள் முதலில் உணர்ந்துவிட்டன” எனக் கூறுகின்றனர். சிலர், “சீனாவின் கட்டிட தரமின்மையை பூனைகளே உணர்த்தியிருக்கின்றன” என விமர்சித்தனர். இது போன்ற செயல்களில், விலங்குகளின் இயற்கை அறிவும், பாதுகாப்பும் எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வீடியோ உணர்த்துகிறது.
மேலும், சீனாவில் 82 வயதான லாங் என்ற முதியவர் தனது உயிருடன் அதிகமாக இணைந்திருக்கும் தனது பூனைக்கு பராமரிப்பு தருபவருக்கு தனது வாழ்நாள் சொத்துகளை முழுவதுமாக விட்டுச்செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்தது இது போன்ற சம்பவங்களால் விலங்குகள் மீது மக்கள் கொண்டுள்ள உணர்வுப்பூர்வமான பாசத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
View this post on Instagram
