இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உங்களுக்கு ஹோம் வொர்க் தான எழுதனும் எப்படி எழுதுனா என்ன 😒 pic.twitter.com/jvrh50JEvI
— KodaiA2_Holidays (@KodaiA2_Holiday) July 17, 2025
அதாவது அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உள்ள சேரில் தனது இரு கால்களையும் வைத்துவிட்டு தலைகீழாக படுத்துக்கொண்டு தனது வீட்டுப்பாடங்களை எழுதுகிறார். இதனை வீட்டில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார். அதில் அந்த சிறுவன் தனது இரு கால்களையும் சேரில் மீது வைத்துக்கொண்டு தலைகீழாகப்படுத்து வீட்டு பாடம் எழுதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் “உங்களுக்கு தேவை ஹோம் ஒர்க் எழுதி முடிக்கணும் அவ்வளவு தானே” என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
