தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமார்  இயக்கி இருந்த நிலையில் ராஷ்மிகா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனப்பட குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் லிரிக்கல் ப்ரோமோ  வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வலைதளத்தில் வைரலாகி வருகிறது.