தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அபர்ணாதாஸ். இவர் கவினுடன் இணைந்து டாடா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் மலையாள நடிகர் தீபக் என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் தீபக் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் 28 வயதாகும் நடிகை அபர்ணாவுக்கு இன்று திருமணம் கேரளாவில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Siju Wilson (@siju_wilson)