சென்னையில் தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 96,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13,134 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,05,072 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இன்றி ஒரு கிராம் 196 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,96,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.