தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உட்பட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் டில்லிபாபு முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். மேலும் சமீப காலமாக தொடர்ந்து பிற கட்சியில் இருப்பவர்கள் வேறு கட்சியில் இணைவது நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
