இந்தியாவில் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமான டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விமான டிக்கெட் சலுகை ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. இந்த சலுகை டிக்கெட் விமானத்தின் எகனாமி வகுப்புக்கு மட்டுமே கிடைக்கும்.

அதன் பிறகு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு உங்கள் விருப்பம் போல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில் சிறப்பு தள்ளுபடியில் விமான டிக்கெட்டின் விலை ரூ. 1705 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்த சலுகையை உள்நாட்டின் 49 இடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் சில தள்ளுபடி விமான டிக்கெட் கட்டணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி,

திமாப்பூர்-கவுகாத்தி ரூ. 1783

கோவா-மும்பை ரூ. 2830

அகமதாபாத்-மும்பை ரூ. 1806

டெல்லி-ஸ்ரீநகர் ரூ. 3730

டெல்லி-போர்ட் பிளேர் ரூ. 8690

டெல்லி-கோவா ரூ. 5656

டெல்லி-உதய்பூர் ரூ. 3680

பெங்களூர்-மும்பை ரூ. 2319

டெல்லி-மும்பை ரூ. 5075

சென்னை-டெல்லி ரூ. 5985