உலகம் முழுவதும் இருந்து திருப்பதி திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அண்மையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தினை பன் மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். ஆகவே திருப்பதிக்கு போகும் பக்தர்கள் அதிகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்துக்கொண்டு செல்வது அவசியமாகும்.

திருப்பதியில் தினசரி 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் தரிசனம் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள திருப்பதி தரிசனக் கட்டணங்களில் தேவஸ்தானம் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை. எனினும் திருமலையில் உள்ள பல தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் மட்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

திருப்பதி தங்கும் விடுதி பட்டியல்

# திருப்பதி ஸ்ரீனிவாசம் வளாகம்

# திருப்பதி விஷ்ணுநிவாசம்

# திருப்பதி செரினிவாசம் வளாகம்

# திருப்பதி மாதவம் விருந்தினர் மாளிகை

விலைப் பட்டியலுக்கு ஏற்ப சாதாரண அறை மற்றும் ஏசி, ஏசி அல்லாத அறைகள் திருப்பதி திருமலையில் உள்ளது. இதில் விருந்தினர் மாளிகைகள் மற்றும் காட்டேஜ்களுக்கான வாடகை சுமார் 10 மடங்கு உயர்த்தி இருக்கிறது. எனவே சரியான விலைப்பட்டியலை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில், திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணைய பக்கமான TTD-க்கு சென்று முழுமையான விவரத்தை அறியலாம்.