இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து சிறிய வங்கிகள் மற்றும் பெரிய வங்கிகள் வரை மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக பிடித்தம் செய்யப்படும். வங்கி கணக்கில் பணம் ஏறியவுடன் இ எம் ஐ போன்ற பல்வேறு காரணங்களுக்காக பணம் மொத்தமும் செலவாகிவிடும். இப்படி இருக்கையில் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்கு அபராதம் விதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததற்கு அபராதம் விதிக்கப்படுவதை வங்கிகள் நிறுத்திக் கொள்ளலாம் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவந்த் காரத் வங்கிகளின் இயக்குனர் குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் வங்கிகள் சுதந்திரமாக செயல்படும் அமைப்பு என்பதால் மினிமம் பேலன்ஸ் போன்றவைகளுக்காக அபராதம் வசூலிப்பது மற்றும் அதை நிறுத்துவது போன்ற முக்கிய முடிவுகளை வங்கிகள் மட்டும்தான் எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்படுவதை நிறுத்திக் கொண்டால் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்காக அபராத தொகை விதிக்க கூடாது என மத்திய மந்திரி வங்கிகளின் இயக்குனர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது