கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானிகளில் ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து உடனே விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:17 மணியளவில் பாதுகாப்புடன் விமானம் வந்து சேர்ந்தது.

இதற்கிடையில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதன்பின் பயணிகளுக்கு மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, அந்த விமானம் மதியம் 1 மணியளவில் புறப்பட்டு மஸ்கட்டுக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.