சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசியுள்ளார்.
இந்த சுவாரசியமான சந்திப்பின் போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ மஞ்சள் நிற ‘ஜெர்சி’ (Jersey) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட (Autograph) கிரிக்கெட் பேட் ஒன்றும் நினைவாகப் பரிசளிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறையின் மேம்பாடு குறித்தும், ஐபிஎல் போட்டிகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சிஎஸ்கே தலைமை அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது பிரத்யேக ஜெர்சியை அன்பளிப்பாக வழங்கியிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
