தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நான்கு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை. செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினமும் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும் சனிக்கிழமைகளில் வருகின்றன. இதனால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாட்களும் மற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.