நாடு முழுவதும் பண்டிகை  கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதனால் வரும் செப்டம்பர் மாதத்தில் பல மாநிலங்களில் தொடர்ந்து பண்டிகைகளும், விடுமுறை தினங்களுமாக அடுத்தடுத்து வருவதால்,   வங்கி சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே சரியாக திட்டமிட்டுக் கொள்வது நல்லது. அந்தவகையில் செப்டம்பரில் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளித்து, அதற்கான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

16 நாட்கள் விடுமுறை என்றாலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தமிழகத்தில் 4 ஞாயிறு, 2 சனி மற்றும் செப். 6 கிருஷ்ண ஜெயந்தி, செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்.27 மிலாடி நபி (3 நாள் பொதுவிடுமுறை) என மொத்தம் 9 நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.