தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதே களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்து வரும் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் போன்றவைகளும் களத்தில் இருக்கிறது. இந்த நிலையில் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் அடுத்து வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வென்று காட்டுவோம் என்று கூறி வருகிறார்கள். கண்டிப்பாக திமுகவின் ஆட்சி அடுத்த அமைவது உறுதி என்று திமுக தலைவர்கள் கூறிவரும் நிலையில் நேற்று ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றிபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் கனவு வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். சமீப காலமாக அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் என்பது நிலவுகிறது. சமீபத்தில் கூட கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் அப்போதுதான் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் எனவும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கும் செங்கோட்டையன் மற்றும் அதிக முறை கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக 9 முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்ற செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தினார்.
இதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் கட்சியின் பொறுப்பில் இருந்து அவர் நீக்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினார்கள். இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க அதிமுக வலுவாகத்தான் இருக்கிறது எனவும் அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்று கூறி வருகிறார்.
அதே நேரத்தில் நடிகர் விஜய் கண்டிப்பாக எம்ஜிஆர் போன்று அடுத்து வரும் தேர்தலில் அதாவது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பேன் என்றும் முதலமைச்சர் ஆவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் விஜயும் அதற்கு தயாராகி வருகிறார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி இலக்கை நிர்ணயித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகளை வெற்றி இலக்காக நிர்ணயதுள்ளார். இதனால் தற்போது களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
