திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்.09) நடைபெறுகிறது.

இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 12 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டு, எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில், திமுக முப்பெரும் விழா, ‘ஒரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் மற்றும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆரம்ப திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதில், மாவட்டங்களில் நடைபெறும் கட்சியின் வளர்ச்சி, பிரச்சார ரீதியான திட்டங்கள், பொது மக்களுடன் உறவு மேம்படுத்தும் முயற்சிகள் ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.