உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 9 வயது சிறுமி இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சிகந்தரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கால்நடைகளுக்குப் புல் அறுப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள், அந்தச் சிறுமிக்கு பழங்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அருகில் இருந்த கோதுமை வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த இரு சிறுவர்களும் சேர்ந்து 9 வயது சிறுமியைத் தொடர்ச்சியாகக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்தில் இருந்து தப்பித்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த துயரத்தை அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட இரு சிறுவர்களையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு நேர்ந்த இந்த அவலம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
