சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். காரியங்கள் அனைத்தும் சூடுபிடிக்க துவங்கும். முயற்சி வெற்றியை கொடுக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெரும்  சூழல் உள்ளது. இந்த நாள் உங்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். அனைவரும் வியக்கும் படி நடந்து கொள்வீர்கள். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். தடைபட்ட காரியங்கள் சுறுசுறுப்பாக நடக்கும்.

மதிப்பு மரியாதையும் கூடிவிடும். இந்த சாமர்த்தியமான செயல்களால் வெற்றி பெறுவீர்கள். கவனமாக பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடிவிடும். அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பெண்கள் தைரியமாக முடிவெடுக்க கற்றுக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். இன்று மாணவர்கள் நன்றாக படிப்பீர்கள்.  சிறந்த செயல்களை செய்து வாழ்த்துக்களை பெறுவீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள்கலந்த  சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: பார்த்து

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்