கன்னி ராசி அன்பர்களே,

இன்று நினைத்த வாழ்க்கை உங்களுக்கு அமையும். அற்புதமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் தேடி வரும். எதிரிகள் இன்று விலகி செல்வார்கள். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். மற்றவர்களுக்கு உதவுவதால் வீண் அலைச்சல் ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டி பொறாமைகள் விலகி செல்லக்கூடும். சக நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் செயல்பட வேண்டும். சாமர்த்தியமான பேச்சு மூலம் நல்லது நடக்கும். பெண்கள் இன்று யோசித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும்.

இன்று ஆடை அலங்கார பொருட்கள் சேர்க்கை இருக்கும். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்