துலாம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்ளும் காலகட்டம் கண்டிப்பாக வந்துவிட்டது. எல்லோரும் உங்களை பார்த்து பூரிப்பார்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு நேர்மையாக நடப்பீர்கள். அற்புதமாக செயல்படும் சூழலை மேம்படுத்திக் கொள்வீர்கள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். முன்னேற்றமான வாழ்க்கை அமையும்.

அந்நிய தேச தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சனை தீர்ந்துவிடும். போட்டிகளும் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறுதலாக புரிந்து கொண்டு கவலை அடைவீர்கள். பெண்கள் இன்று ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நிதி நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

பக்குவமாக எந்த செயலிலும் ஈடுபடுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படும் சூழல் உள்ளது. இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நன்றாக படிப்பது ரொம்ப முக்கியம். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்