விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவுகளை எடுக்க வேண்டாம். இன்று குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பல நாட்களாக நடைபெறாமல் இருந்த காரியம் இன்று நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட தடுமாற்றம் விலகி செல்லும்.

இன்று கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உபரி பணம் வருமானத்திற்கு புதிய யுக்திகளை செயல்படுத்த பார்ப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் சூழல் உள்ளது. பணவரவு சீராக அதிகரிக்கும். இன்று பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு தைரியம் மேலோங்கும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட  நிறம்:  மஞ்சள் மற்றும் நீல நிறம்