தனுசு ராசி அன்பர்களே,

இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் கண்டிப்பாக விலகி செல்வார்கள். நட்பால் நல்லது நடக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீக வழியில் முற்றிலுமாக ஈடுபடுவீர்கள். திட்டம் தீட்டி வெற்றி பெறும் சூழல் உள்ளது. அற்புதமாக பணிகளை மேற்கொண்டால் வெற்றி மீது வெற்றி பெறலாம்.

நிதி நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். காசு பணத்தை சேமிப்பாக மாற்ற வேண்டும். தன்னம்பிக்கையை விட்டு விட வேண்டாம். கோபமாக வாதிட வேண்டாம். வீடு மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். காரிய வெற்றிக்கு கடுமையாக போராடுவீர்கள். குடும்ப கவலை நீங்கிவிடும். பயம் வேண்டாம். பெண்கள் இன்று  நினைவுகளின் மூழ்கி காணப்படுவீர்கள். எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். சமையலின் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்