கடகம் ராசி அன்பர்களே,

இன்று நப்பான் உங்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். இன்று உங்களுக்கு மங்கள செய்தி வரக்கூடும். வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தின் சகஜ நிலை காணப்படும்.

கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை விலகும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உறவினர் வகையில் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். பெண்கள் இன்று மனக்குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். பக்குவமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் தைரியமாக எதிலும் ஈடுபட வேண்டும். குழப்பம் மட்டும் வேண்டாம். புரிதல் உணர்வை அதிகரிக்க வேண்டும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு  அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்