மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் கண்டிப்பாக இருக்கும். குடும்ப சுமை கூடிவிடும். தன வரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விருப்பங்கள் ஓரளவுக்கு கை கூடிவிடும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நட்பால் நல்லது நடக்கும். மனதில் ஒருவித தைரியம் ஏற்படும். சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெண்கள் இன்று எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வீர்கள். உணர்ச்சிகரமாக பேசுவீர்கள். கோபம் வெளிப்படும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

இன்று மாணவர்களுக்கு மனதிற்குள் தைரியம் ஏற்படும். வெற்றி பெறும் எண்ணம் உருவாகும். கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்