ரிஷப ராசி அன்பர்களே,

இன்று திறமையால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். துணிச்சல் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்கள் சிறப்பாக நடக்கும். எல்லோரிடத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும்.

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நேர்மையால் வெற்றி பெறுவீர்கள். பண வரவு சீராக இருக்கும். இன்று பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்திற்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ஆடை அணிகலன் வாங்கும் சூழல் உள்ளது.

மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். விளையாட்டுத்தனமாக செயல்படுவீர்கள். நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்