மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் கவலைகளை மறந்து செயல்படும் நாளாக இருக்கிறது. சந்தித்தவர்களால் சந்தோஷம் ஏற்படும். அதிக செலவாகும் என்று நினைத்த காரியம் குறைந்த செலவில் முடியும். தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்வீர்கள். கலகலப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த இடைவெளி குறைந்து விடும்.

உறவினர்கள் வழியே நல்ல பலன் கிடைக்கும். நண்பர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகிச் செல்லும். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பெண்கள் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். அனைவரிடத்திலும் அன்புடன் பழகுவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் மட்டும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் எதையும் தனித்து செய்ய பார்ப்பீர்கள். யோசித்து முடிவு எடுப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்:  வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்