தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படம் விஜயின் கடைசி திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் கவலை கலந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், விஜய் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து எழுந்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து பேசுகையில்,
“சினிமா ஒன்றும் அழிந்து விடாது. என்னைப் போன்ற பலரை வளர்த்துவிட்டது சினிமா. அது அப்படியேதான் இருக்கும். யாருக்காகவும் காத்திருக்காது,” எனக் கூறினார். கருணாஸின் இந்த கருத்து, விஜயின் அரசியல் பயணம் மற்றும் அவரது சினிமா விடைபெறல் குறித்து விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
