2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் பலர், அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக இணைந்தவர்களை அதிமுகவில் வரவேற்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக இணைந்தவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் கரூர் செந்தில் பாலாஜி கோட்டையாக இருக்கும் நிலையில் அங்கிருந்து திமுக நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
