திருமண விசேஷத்திற்காகச் சென்ற ஒரு கார் ஓட்டுநர், பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிருழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினௌரா கிராமத்தைச் சேர்ந்த நம்பர்தார் என்பவரின் மூத்த மகன் மஸ்ரூர் (28). கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று, திருமண ஊர்வலம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக மஸ்ரூர் தனது காரை ஓட்டிச் சென்றார்.
வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கிற்குச் சென்ற அவர், டீசல் நிரப்புவதற்காகக் காரை நிறுத்தினார். காரை விட்டு கீழே இறங்கியவர், கண்ணாடியைத் துடைத்துவிட்டு ஊழியரிடம் டீசல் போடுமாறு கூறியுள்ளார். டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோதே மஸ்ரூர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். சில வினாடிகளில் மீண்டும் எழுந்திருக்க முயன்றவர், மறுபடியும் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
एक और मौत.
पेट्रोल पंप पर खड़े युवक को आया हार्ट अटैक. जमीन पर गिरे युवक की चंद सेकेंड में मौत. यूपी के लखीमपुर का मामला है. pic.twitter.com/1p9BvCkNZg
— Priya singh (@priyarajputlive) February 9, 2026
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக நிகாசனில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு (CHC) கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
இச்சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சியாக, மஸ்ரூர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது உடலை வெளியே எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ‘ஸ்ட்ரெச்சர்’ (Stretcher) கூட வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி உறவினர்கள் மஸ்ரூரின் உடலைத் தங்களது தோள்களில் சுமந்து சென்றது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முதற்கட்ட விசாரணையில் இது மாரடைப்பால் ஏற்பட்ட மரணம் என்று மருத்துவர் டி.என். சிங் உறுதிப்படுத்தியுள்ளார். 28 வயது இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
