ரயில் தண்டவாளங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வேத்துறை என்ஜின்களின் முன்பகுதியில் விசேஷ உலோகத் தகடுகளைப் பொருத்தும் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் கிடக்கக்கூடிய சிறிய கற்கள், ஜல்லிகள் அல்லது இதர தடைகள் ரயிலின் சக்கரங்களுக்குள் சிக்கி விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்தத் தகடுகள் கேடயம் போலச் செயல்படுகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by The Now India (@thenowindia)

ரயில் அதிவேகமாகச் செல்லும்போது இத்தகு தடைகளை இந்த உலோகத் தகடுகள் பக்கவாட்டில் தள்ளிவிடுவதால் ரயில்கள் தடம் புரள்வது தவிர்க்கப்படுவதுடன் இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதும் பெருமளவு குறைக்கப்படுகிறது. முதற்கட்டமாக முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தண்டவாளப் பராமரிப்புச் செலவைக் குறைப்பதோடு ரயில்கள் தடையின்றிச் சரியான நேரத்தில் இயங்கவும் வழிவகுக்கிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நவீன முயற்சியானது எதிர்காலத்தில் அனைத்து ரயில்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.