தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்கள், சாலையில் அமர்ந்திருந்த ஒரு முதியவருக்கு நேரில் சென்று உதவி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சாலையில் ஆதரவற்று அமர்ந்திருந்த அந்த முதியவரைக் கண்ட ஆனந்த், காரை நிறுத்தி அவரிடம் நெருங்கிச் சென்று நலம் விசாரித்தார். “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டதுடன், அவருக்குத் தேவையான பண உதவிகளையும் உடனடியாக வழங்கினார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
யோசிக்காமல் அமைச்சர் புஸ்சி ஆனந்த அவர்கள் செய்த செயல்😊😇@BussyAnand 🙏❤ pic.twitter.com/0Z73cK7ZiV
— 𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 (@TVK_Dinshu) May 14, 2026
பணம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த முதியவர் தனது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள நிரந்தரமான தீர்வு ஒன்றையும் ஆனந்த் முன்மொழிந்துள்ளார். அந்த முதியவருக்குச் சொந்தமாக ஒரு சிறு கடை வைத்துத் தருவதாகவும், அதன் மூலம் அவர் தனது வாழ்க்கையைத் தற்சார்புடன் நடத்திக் கொள்ளுமாறும் உறுதியளித்துள்ளார். அரசியல் கடந்து ஒரு மனிதராக அவர் செய்த இந்த மனிதாபிமானச் செயல் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.
