இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கேமராவும் கையுமாக மக்கள் ஏதோ ஒரு வித்தையைச் செய்து வைரலாகத் துடிக்கிறார்கள். அந்த வகையில், இரண்டு பெண்கள் மிகவும் ஸ்டைலாக படிக்கட்டுகளில் இறங்கி வருவது போல ஒரு ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றனர். சினிமா ஹீரோயின்கள் போல முகபாவனைகளை வைத்துக் கொண்டு, ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு அவர்கள் இறங்கி வந்த விதம் பார்ப்பதற்கு ஏதோ ஒரு பெரிய படப்பிடிப்பு நடப்பது போலவே இருந்தது.

​ஆனால், அந்தப் பெண்களின் அதீத தன்னம்பிக்கை சில நொடிகளில் தமாஷாக மாறியது. முன்னால் நடந்து வந்த பெண், தனது நடையை ஸ்டைலாக மாற்ற முயன்றபோது திடீரென நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வழுக்கி விழுந்தார். அந்தரத்தில் கால்கள் ஊசலாட, அவர் தடுமாறிய அந்த நொடி அப்படியே கேமராவில் பதிவானது. கிளாசிக்கான வீடியோவை எடுக்க ஆசைப்பட்டு, இறுதியில் அது ஒரு செம காமெடியான ‘ஃபெயில்’ வீடியோவாக முடிந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பலமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பலரையும் சிரிக்க வைத்து வைரலாகி வருகிறது.