மகாராஷ்டிரா சட்டசபை 288 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 145 இடங்களிலும், சிவசேனா 81 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மற்றொருபுறம் மகா விகாஸ் ஆகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 102 தொகுதிகளிலும், சிவசேனா 92 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 86 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வந்த நிலவரப்படி பாஜக கூட்டணி 222 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும் மற்றவை 12 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் பாஜக தலைவர்களின் இல்லங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அப்போது ஏற்கனவே முதலமைச்சர் ஆக தொடர்வாரா? அப்படி இல்லை என்றால் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சராக்கப்படுவாரா? இல்லை அஜித் பவாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் தேர்தலை சந்திப்போம். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.