​வங்கதேசத்தில் இருக்கும் இஸ்கான் கோவில் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 14 சிலைகள், 20,000 டாக்கா பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளைச் சூறையாடிச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மன்பாரியா நகரில் அமைந்துள்ள இந்தக் கோவிலில், பீரோவை உடைத்து நகைகளையும், பூஜை அறையில் இருந்த விலைமதிப்பற்ற சிலைகளையும் திருடிச் சென்றுள்ளனர். “சாமிக்கே பாதுகாப்பு இல்லையா?” என்று சொல்லும் அளவுக்கு இந்தத் திருட்டுச் சம்பவம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

​இந்தக் கோவிலில் திருட்டு நடப்பது இது முதல் முறை அல்ல; ஏற்கனவே 2017-ம் ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்போது இரண்டாவது முறையாகக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அங்கிருக்கும் இந்துக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. “எங்களுக்குப் பாதுகாப்பே இல்லை, ரொம்ப அச்சமா இருக்கு” என்று கோவிலின் குருக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடக்கும் இது போன்ற தாக்குதல்கள் உலகெங்கும் இருக்கும் பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.