சமூக வலைதளங்களில் புதுமை என்ற பெயரில் பல வினோதமான உணவுகள் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள “சிகரெட் பக்கோடா” வீடியோ சாப்பாட்டு பிரியர்களின் வயிற்றைக் கலங்க வைத்துள்ளது. ‘aslamhossain2033’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், நபர் ஒருவர் கிச்சனில் அமர்ந்து கொண்டு கடலை மாவு கரைசலில் சிகரெட்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கிறார். பக்கோடாவின் புனிதத்தையே கெடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ‘கொலைவெறி’ சமையல், இணையத்தில் பெரும் கண்டனங்களை குவித்து வருகிறது.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபத்தையும் கிண்டலையும் கமெண்டுகளில் கொட்டி வருகின்றனர். “இதனைச் சாப்பிடுவதா அல்லது புகைப்பதா?” என்று ஒரு பயனர் கேள்வி எழுப்ப, மற்றொருவரோ “இதனைப் பார்த்தாலே எனக்கு இரத்த வாந்தி வருகிறது” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “இனி பக்கோடா சாப்பிடும் ஆசையே போய்விட்டது” எனப் பலரும் புலம்பித் தள்ளும் நிலையில், லைக்குகளைப் பெறுவதற்காக உணவின் தரத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் கேலி செய்யும் இது போன்ற விபரீத வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன.