பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் நபர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு ரஷ்ய மாடலிடம், வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மிகவும் நெருக்கமாகச் சென்று வேண்டுமென்றே உரசுவது போல் தெரிகிறது. அந்த நபரின் அநாகரீகமான செய்கையை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், அடுத்த நொடியே ஆவேசமடைந்து அந்த நபரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற அந்த நபருக்குக் கிடைத்த உடனடித் தண்டனை அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
BIG NEWS 🚨 Russian model slaps a Bangladeshi man for touching her inappropriately. pic.twitter.com/ywsAJ1sQfl
— News Algebra (@NewsAlgebraIND) March 11, 2026
இந்தக் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் துணிச்சலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். “யாராக இருந்தாலும் பெண்களின் எல்லைகளை மீறினால் இதுதான் கதி” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்த நாட்டுப் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் சில நபர்களால் ஒட்டுமொத்த நாட்டிற்கே அவப்பெயர் ஏற்படுவதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. தன்னைத் தற்காத்துக் கொள்ள அந்த ரஷ்ய மாடல் காட்டிய வேகம், பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
