உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகேயுள்ள லோனி பகுதியில், நபர் ஒருவர் உருளைக்கிழங்குகளைத் தனது காலால் மிதித்துச் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் வகையில், அந்த நபர் ஒரு பெரிய தொட்டியில் கொட்டப்பட்டுள்ள உருளைக்கிழங்குகளைத் தண்ணீரில் போட்டு, அழுக்கு நீங்குவதற்காகத் தனது கால்களால் போட்டு மிதிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“இவ்வளவு கீழ்த்தரமான முறையில் உணவுப் பொருட்களைக் கையாளுபவர்கள் மீது தயவு காட்டக்கூடாது” எனப் பலரும் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.