மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் விடுதி உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவில் பல்லி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து அங்கிருந்த ஊழியரிடம் புகார் அளித்தனர். ஆனால், அந்த ஊழியரோ அது பல்லி கிடையாது, வெறும் ‘குடைமிளகாய்’ தான் என மிகவும் சாதாரணமாகக் கூறி சமாளிக்க முயன்றார்.
ஊழியரின் இந்த பொறுப்பற்ற பேச்சால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த காட்சியை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, தற்போது அந்த வீடியோ வைரலாகி உணவு பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
